47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா பிறந்தநாளில் வெளியான 2 பட அப்டேட்டுகள்! 

தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா தற்போது முன்னணி நடிகையாக தெலுங்கில் வலம் வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் குவிகிறது. 

News image
Updated On :15 ஜூன் 2023, 4:04 pm

DIN

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு பேசும் ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை 2021இல் முடித்தார். அதற்கு முன்பாகவே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். 2022இல் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.

சமீபத்தில் ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து மிகப்பெரும் ஆதரவினைப் பெற்றார். சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப் பழகியவர். இவரது பல்சர் பாடல் செம்ம வைரலானது. 

தற்போது மகேஷ்பாபு, பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

Story image

இன்று பிறந்தநாள் காணும் ஸ்ரீ லீலாவிற்கு பலரும் வாழ்த்துகள் கூறிவரும் நிலையில் மகேஷ் பாபு குண்டூர் காரம் படக்குழு அவரது முதன்மை தோற்ற போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

YouTube video thumbnail

அடுத்து பஞ்ச வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக நடிக்கும் ஆதிகேஷவா படத்தில் இருந்து சிறப்பு விடியோ வெளியிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.