அதிவேகமாக 1.2 கோடிப் பார்வைகளைக் கடந்த நா ரெடி பாடல்!
லியோ படத்தில் விஜய் பாடிய நா ரெடி பாடல் அதிவேகமாக 1.2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் விஜய் குரலில் நேற்று வெளியானது. இப்பாடல் துள்ளள் பாடலாக வெளியானது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர்.
இதையும் படிக்க: எதிர்க்கட்சிகள் கூட்டம்: பிகார் வந்த கார்கே, ராகுல் காந்தி!
இந்நிலையில், இப்பாடல் கடந்த 16 மணி நேரத்தில் அதிவேகமாக 1.2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.