‘உருட்டு உருட்டு’: கவனம் பெறும் 'பப்ளிக்' திரைப்பட பாடல்
இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள பப்ளிக் திரைப்படத்தின் உருட்டு உருட்டு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள பப்ளிக் திரைப்படத்தின் உருட்டு உருட்டு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சமுத்திரக்கனி, காளிவெங்கட், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் பப்ளிக். இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நடப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவாகியுள்ள உருட்டு உருட்டு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | விரைவில் ’லால் சலாம்’ படப்பிடிப்பு
இந்தப் பாடலை பாடலாசிரியரும், கவிஞருமான யுகபாரதி எழுதியுள்ளார். ஜெயமூர்த்தி, செந்தில் கணேஷ் பாடியுள்ளனர்.

அரசியலைக் கிண்டலடித்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...