
பாரதி கண்ணம்மா 2 தொடரில் முக்கிய நடிகை ஒருவர் மாற்றப்பட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா முதல் சீசன் வெற்றியடைந்த நிலையில், பாரதி கண்ணம்மா 2 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றை இயக்கிய பிரவீன் பென்னட் 2வது சீசனையும் இயக்கி வருகிறார்.
சிபு சூர்யன் பாரதி கதாபாத்திரத்திலும், வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா 2 ஆம் பாகம் ஆரம்பித்து ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது கதைக்களம் விருவிருப்பு அடைந்துள்ளது.
இந்த நிலையில், அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியங்கா தாஸ், இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதால், அவருக்கு பதில் சாய் ரித்து என்பவர் அஞ்சலியாக கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சீரியல்களில் அடிக்கடி கதாபாத்திரங்கள் மாற்றப்படுவது வழக்கமாகி விட்டது. இந்த மாற்றத்தை ரசிகர்களும் ஏற்றக்கொள்ள தொடங்கிவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.