இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சந்திரமுகி - 2 படக்குழுவினருடன் ஹோலி கொண்டாடிய கங்கனா!

சந்திரமுகி - 2 படக்குழுவினருடன் நடிகை கங்கனா ரணாவத் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

News image
Updated On :8 மார்ச் 2023, 10:05 am

DIN

சந்திரமுகி - 2 படக்குழுவினருடன் நடிகை கங்கனா ரணாவத் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கி வருகிறார்.

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை - தோட்டா தரணி.

மேலும், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு நடிகை கங்கனா படக்குழுவினர் முகத்தில் வண்ணப் பொடிகளைத் தடவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.