மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆஸ்கர் விருதைத் தொகுத்து வழங்க அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் தீபிகா படுகோன்!

2023 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கவுள்ளார்.

News image
Updated On :10 மார்ச் 2023, 7:07 am

95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். 

இந்நிலையில், ஆஸ்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை ஆஸ்கர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார். 

Story image

ஆஸ்கர் விருதுகளுக்காக விமான நிலையத்தில் தீபிகா புறப்பட்ட புகைப்படமும், அவரது கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் அவரை விமான நிலையத்தில் இறக்கிவிடும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

தீபிகா படுகோனுடன், ரிஸ் அகமது, எமிலி பிலன்ட், ட்வானே ஜான்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடுவர்களில் ஒருவராகவும் தீபிகா படுகோன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு கூத்து பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு ஆவணப்படங்களும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் உள்ளது. இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்கர் விழாவைத் தொகுத்து வழங்குவது கூடுதல் அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.