ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பத்து தல படத்தின் 2-வது பாடல் மார்ச் 13-ல் வெளியாகிறது

பத்து தல படத்தின் 2-வது பாடல், ‘நினைவிருக்கா' மார்ச் 13ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

News image
Updated On :11 மார்ச் 2023, 3:41 pm

DIN

பத்து தல படத்தின் 2-வது பாடல், ‘நினைவிருக்கா' மார்ச் 13ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது.

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் படத்தின் 2வது பாடல், ‘நினைவிருக்கா' மார்ச் 13ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.