அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த மூலப்பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணப்படப் பிரிவில் இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும் விருதை பெற்றுள்ளது.
இதையும் படிக்க: குடும்பம் குறித்து நடிகை ஷாலினி பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!
சிறந்த நடிகைக்கான விருது மலேசிய நடிகையான 60வயதான மிச்செல் இயோஹோவுக்கு கிடைத்தது. ‘எவிரிதிங் எவிரிவேர் ஆர் அட் ஒன்ஸ்’ திரைப்படத்திற்காக இந்த விருது கிடைத்தது. இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் 7 விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே முதன்முறையாக ஆஸ்கரில் சிறந்த நடிகை விருது பெற்ற நடிகையும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் இந்தியாவிற்கு உள்ள தொடர்பு:
மிச்செல் யோவுக்கும் இந்தியாவிற்கும் இணைப்பு உள்ளது. இமயமலை முழுவதும் 1000 மடங்களுக்கு மேல் உள்ள இந்தியாவை தளமாகக் கொண்ட ட்ருக்பா அமைப்பின் ஆன்மீகத் தலைவரான புத்த மதத் தலைவர் கியால்வாங் ட்ருக்பா அவரது வாழ்க்கையின் 'பின்னணியில்' உள்ளார்.
இதையும் படிக்க: சமந்தா பதிவிற்கு கமெண்ட் செய்த அனுஷ்கா சர்மா!
கியால்வாங் ட்ருக்பாயின் சீடரான மிச்செல் அவரது ஆலோசனையின் பேரில் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹாலிவுட்டில் இருந்து தனது 'லைவ் டு லவ்' அறக்கட்டளைக்காக நிதி திரட்டினார்.
2015இல் நடந்த நேபாள நிலநடுக்கத்தில் 9000 பேர் இறந்தனர். 21ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். அதிகபட்ச சேதாரமும் நிகழ்ந்தது. இந்த நிலநடுக்கத்தில் மிச்செல் இயோவும் அவரது கணவரும் சிக்கிக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் நேபாளம் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வளித்தார்.
இதையும் படிக்க: மாளவிகாவை ‘க்யூட்’டாக புகைப்படமெடுத்த நடிகர் விக்ரம்!
புத்த மதத்தின் மீது நம்பிக்கையுள்ளவர். ஐக்கியநாடுகள் முன்னேற்ற அமைப்புடன் சேர்ந்து தரமான சாலைகள் அமைக்க தொடர்ந்து பங்களித்து வருகிறார். இதன் நல்லெண்ண தூதுவராகவும் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஹெச்ஐவி நோயாளிகளுக்காகவும் பல வருடங்களாக போராடி வருகிறார்.
இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு ஐஏஎன்எஸ்க்கு அளித்த பேட்டியில் மிச்செல், “நேபாள மக்களுக்கு இன்னமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியமான பங்கு எனக்கிருக்கிறது. என்ன நடந்ததோ அது உண்மை, மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகமான வேலைகள் உள்ளது. எனது சிறந்த நடிப்பு இனிமேல்தான் வரும்” எனக் கூறியிருந்தார். விருது வாங்கியப் பின், “பெண்களே, நீங்கள் எப்பொழுதும் உங்கள் சிறந்த காலத்தை கடந்துவிட்டீர்கள் என்று யாரும் சொல்லும்படி வைத்துக்கொள்ளாதீர்கள்" எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணக் கோலத்தில் வாக்களித்த தம்பதி

நிலக்கோட்டை தொகுதியில் 2 கிராமங்களில் தோ்தல் புறக்கணிப்பு!
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


