தசரா டிரைலர் இன்று மாலை வெளியீடு!

நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தசரா டிரைலர் இன்று மாலை வெளியீடு!

நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து நானி நடித்துள்ள தசரா படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கனடா, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள தசராவில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாநகரம், கைதி புகழ் சத்தியன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம்  வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரைலர் இன்று மாலை 3.33 மணிக்கு லக்னெளவில் உள்ள பிரதிபா திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, யூடியூப் சேனல்களில் மாலை 4.59 மணியளவில் வெளியாகவுள்ளது.

தெலுங்கு படங்களான புஷ்பா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தசரா படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com