நடிகர் விஜய்-க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து வெளியிட்ட ட்வீட் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர் கெளதம் வாசுதேவ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது 37-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து லோகேஷ் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிக்க | “எனது சகோதரனாக, மகனாக இருக்கும்”: லோகேஷுக்கு சஞ்சய் தத் வாழ்த்து!
நடிகர் விஜய்யுடன் காஷ்மீரில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள லோகேஷ், ‘எல்லாத்துக்கும் நன்றி விஜய் அண்ணா’ என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய்யுடன் லோகேஷ் இருக்கும் புதிய புகைப்படத்தை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துபையில் டிரோன் தாக்குதல்: விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்!

சிலிண்டர் தட்டுப்பாடு! முண்டியடித்து முன்பதிவு செய்ததால் நேர்ந்தது என்ன?

மேற்கு வங்கத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

162 நாள்களில் நிறைவடைந்த மகளே என் மருமகளே தொடர்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

