காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

‘தசரா’ படத்தின் டிரைலர் வெளியானது! 

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படத்தின் டிரைலர் வெளியானது. 

Published On :

ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து நானி நடித்துள்ள தசரா படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கனடா, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள தசராவில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தை ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாநகரம், கைதி புகழ் சத்தியன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஏற்கெனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம்  வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. 

தெலுங்கு படங்களான புஷ்பா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தசரா படத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.