

லியோ படப்பிடிப்பில் த்ரிஷ்யம் 2 படத்தின் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மிரட்டலான தோற்றம்.. லியோவில் இணைந்த அர்ஜுன்!
மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் வழக்கறிஞராக நடித்த சாந்தி மாயாதேவி லியோவில் இணைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.