2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஜவானுக்காக தமிழில் பாடிய ஷாருக்கான்!

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அ

News image
Updated On :9 மே 2023, 8:48 am

DIN

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் ஷாருக்கானிடம், ‘அட்லி உங்களை தமிழ் கற்க வைத்தாரா? எனக் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு ஷாருக்கான், ‘அட்லியும் அனிருத்தும் என்னை தமிழில் பாட வைத்துள்ளனர். அதைச் சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்’ என பதிலளித்துள்ளார். 

ஜவானில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை - அனிருத்.

மேலும், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.