தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லியோ வெற்றி விழா: படையெடுக்கும் ரசிகர்கள்!

லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை ரசிகர்கள் சூழ்ந்துள்ளனர்.

News image
Updated On :1 நவம்பர் 2023, 9:37 am

DIN

லியோ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முன்னதாக, அந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்துவதற்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை பெருநகர காவல்துறையில் கடந்த வாரம் அனுமதியும் பாதுகாப்பும் கோரி மனு அளிக்கப்பட்டது.

இதை ஏற்று லியோ திரைப்பட வெற்றி விழா நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

குறிப்பாக, நிகழ்ச்சியில் 5 ஆயிரம் போ் கலந்து கொள்ளவே அனுமதி அளிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும், நேரு உள்விளையாட்டு அரங்கில் வாகன நிறுத்துமிட அளவுக்கு ஏற்றாற்போலவே விழாவில் பங்கேற்க வருவோரின் வாகனங்களுக்குரிய பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனா்.

மேலும், இந்த விழாவில் கலந்துகொள்ளும் ரசிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பாஸ் உடன், விஜய் மக்கள் இயக்க அடையாள அட்டையையும் ஆதார் அட்டையையும் கொண்டு சென்றால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்குத் துவங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த ரசிகர்கள் அரங்கத்திற்குள் நுழைய நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.