சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கயல் தொடர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த முறை வானத்தைப்போல தொடர் முதலிடத்தில் இருந்தது.
தமிழகத்தின் பல முன்னணி தொலைக்காட்சிகளும் சின்னத்திரை தொடர்களை பிரதாமனாகக் கொண்டு ஒளிபரப்பாகின்றன. ஒரு நாளில் அதிகபட்சமாக தொடர்களே ஒளிபரப்பாகின்றன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கயல் - எதிர்நீச்சல் ஆகிய இரு தொடர்கள் மட்டுமே டிஆர்பி பட்டியலில் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டன. ஒருகட்டத்தில் எதிர்நீச்சல் தொடர் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்தது.
இதனிடையே இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பி பட்டியலில் கயல் தொடர் 10.85 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.
அதற்கு அடுத்தபடியாக வானத்தைப்போல தொடர் 10.72 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
3வது இடத்தில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. சிங்கப்பெண்ணே தொடர் 10.65 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
கடந்த மாதம் முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர் தற்போது 4வது இடத்தில் உள்ளது. இந்தத் தொடர் டிஆர்பி பட்டியலில் 9.99 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
சுந்தரி தொடர் 5வது இடத்தில் உள்ளது. சுந்தரி தொடர் 9.94 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
6வது இடத்தில் இனியா தொடர் உள்ளது. இந்தத் தொடர் 7.96 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
7வது இடத்தில் ஆனந்த ராகம் தொடர் உள்ளது. அனுஷா நடிக்கும் இந்தத் தொடர் 7.59 புள்ளிகளைப் பெற்றுள்ளது.