ஆன்மிக பயணத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள படங்களுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 
ஆன்மிக பயணத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Published on
Updated on
1 min read


நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள படங்களுக்கு ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் வினு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சென்னையில் ரித்திகாவின் திருமணம் நடைபெற்றது. 

அவ்வபோது புகைப்படங்கள், விடியோக்கள் பதிவிட்டு ரசிகர்களுடன் உரையாடிவரும் ரித்திகா, தற்போது ஈஷா மடத்தில் இருப்பதைப்போன்ற படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் தனது கணவருடன் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆதியோகி முன்பு அமர்ந்தி தியானம் செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் இம்முறை ரித்திகா ஆன்மிக பயணம் சென்றுள்ளதை ரசிகர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

நடிகை ரித்திகா விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018ஆம் ஆண்டு ராஜா ராணி தொடரில் சின்னத்திரையில் அறிமுகமானார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் பாலா - ரித்திகா இணைக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றார். தற்போது பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ரித்திகா பங்கேற்று வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com