பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி கலவையான விமரிசனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
இதையும் படிக்க: என் தங்கமே...: நயன்தாரா பிறந்தநாளுக்கு வாழ்த்திய விக்னேஷ் சிவன்!
தொடர்ந்து, நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் மண்ணாங்கட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை டூட் விக்கி இயக்குகிறார். கோலமாவு கோகிலா படத்துக்குப் பிறகு யோகிபாபு இப்படத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார்.
இதையும் படிக்க: இசை மருத்துவர் யுவன் ஷங்கர் ராஜா: வைரல் விடியோ!
மேலும், சமீபத்தில் நயன்தாராவின் 75-வது படம் அறிவிக்கப்பட்டது. அன்னபூரணி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: சப்த சாகரதாச்சே எல்லோ: ரசிகர்களின் ஆதரவில் கூடுதல் காட்சிகள் !
இப்படம் வருகிற டிச.1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நயன்தாராவின் 39வது பிறந்த நாளில் அன்னபூரணி படத்திலிருந்து ‘உலகை வெல்ல போகிறாள்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.