பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இன்று வரவுள்ளதாக ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.
இதுவரை அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா தேவி, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப் ஆண்டனி, ஐஷு மற்றும் கானா பாலா ஆகியோர் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிக் பாஸ் வீட்டிலிருந்து 14 போட்டியாளர்களுக்கும், 3 வைல்டு கார்டு போட்டியாளர்களுக்கு நடைபெறவுள்ள போட்டியில் தோல்விபெறும் 3 பேர் பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர்!
3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் புதிதாக வருவார்களா அல்லது இந்த சீசனிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வருவார்களா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் 3 போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டி20 உலகக் கோப்பை: 3வது முறையாக இந்தியா சாம்பியன் - புகைப்படங்கள்
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது

டி20 உலகக் கோப்பை: 3-வது முறையாக சாம்பியன்; வரலாறு படைத்த இந்திய அணி!

யூத் டிரைலர்!
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

