இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அட்லி தன் தயாரிப்பு நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ மூலம் ஹிந்தியில் தெறி படத்தை ரீமேக்கை தயாரித்து வருகிறார். வருண் தவான் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ், வாமிகா கேபி நாயகிகளாக நடிக்க உள்ளனர். இப்படத்தை காளிஸ் இயக்குகிறார்.
இதையும் படிக்க: சித்தா ஓடிடி தேதி!
மேலும், தமிழில் 2 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் அட்லி தயாரிக்க உள்ளாராம். ஆனால், இதன் இயக்குநர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தன் தயாரிப்பில் முதல் படம் வெளியாகாத நிலையில் 4 படங்களை அட்லி தயாரிக்க முன்வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அரசியில் கட்சிகளின் விளம்பரங்களை அகற்றவேண்டும்: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வால் சாமானிய மக்கள் பாதிப்பு! - வைகோ

சட்டப்பேரவைத் தோ்தல்: பறக்கும் படை வாகனங்கள் தொடங்கி வைப்பு
பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

