விஜய்யின் லியோ: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
விஜய்யின் லியோ முதல் சித்தார்த்தின் சித்தா வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.


விஜய்யின் லியோ முதல் சித்தார்த்தின் சித்தா வரை, இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
லியோ
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவ.24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தா
சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படம், ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் ஓடிடியில் நவ.28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சத்தியசோதனை
ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு இயக்குநர் சுரேஷ் சங்கையா சத்தியசோதனை படத்தை இயக்கினார். நடிகர் பிரேம்ஜி நடிப்பில் இந்தப் படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் பெற்றதால் இப்படத்துக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இப்படம் நவ.24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: திட்டமிட்டபடி வெளியாகும் துருவ நட்சத்திரம்!
மேலும், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள தி வில்லேஜ் திரைப்படம் நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...