பீஸ்ட் படத்தை கிண்டல் செய்ததற்கு நெல்சனிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள்! காரணம் பிரதமர் மோடியா?

இது தெரியாமல் கிண்டல் செய்து விட்டோம் என பிரபல இயக்குநர் நெல்சனிடம் சினிமா ரசிகர்கள் மன்னிப்பு கேட்டுவருகின்றனர். 
பீஸ்ட் படத்தை கிண்டல் செய்ததற்கு நெல்சனிடம் மன்னிப்பு கேட்கும் ரசிகர்கள்! காரணம் பிரதமர் மோடியா?

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. 

கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை என தயாரிப்பாளர் கூறியிருந்தார்கள். 

சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் க்ளைமாக்ஸில் ஜெட்டில் போகும்போது மாஸ்கை கழட்டிவிட்டு வணக்கம் வைக்கும் காட்சியை வைத்து இயக்குநர் நெல்சனை கிண்டல் செய்து வந்தனர். 

தற்போது நமது நாட்டின் பிரதமர் மோடி பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தை  சனிக்கிழமை பாா்வையிட்டார். மத்திய பாஜக ஆட்சியின் கீழ் ரூ. 36,468 கோடி மதிப்பில் 83 இலகுரக தேஜஸ் போா் விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். 

பிறகு தேஜஸ் விமானத்தில் மோடி பயணித்தார். இந்த விடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதில் பிரதமர் மோடி மாஸ்கினை கழட்டி கை அசைத்து வருவார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இயக்குநர் நெல்சனிடம் ரசிகர்கள் மன்னிப்பு கெட்டு வருகின்றனர்.

தெரியாமல் கிண்டல் செய்துவிட்டோமென பலரும்  ஜாலியாக மீண்டும் பீஸ்ட்- நெல்சன் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com