ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனு இயக்கத்தில் சூர்யா?

தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனுவுடன் விரைவில் ஒரு புதிய படத்தில் சூர்யா கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

News image
கோப்புப் படம்.
Updated On :9 அக்டோபர் 2023, 9:37 am

DIN

தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனுவுடன் விரைவில் ஒரு புதிய படத்தில் சூர்யா கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெலுங்கில் மாஸ் படங்களுக்கு பெயர் பெற்றவர் போயபட்டி சீனு. இவர் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கிய அகண்டா திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இவரது இயக்கத்தில் அண்மையில் ஸ்கந்தா படம் வெளியானது. இருப்பினும் இந்த படத்துக்கு போதிய வரவேற்பு இல்லை. 

இந்த நிலையில் சூர்யாவுடன் தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனு விரைவில் ஒரு புதிய படத்தில் கைகோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை போயபட்டி சீனுவே பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ், வெற்றி மாறன் என அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, சூர்யா-போயபட்டி சீனு கூட்டணியில் புதிய படம் எப்போது தொடங்கும் என தகவல் எதுவும் வெளியாகவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.