
தலைவர் 170 படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பாஜக மூத்த தலைவர் சந்தித்துள்ளார்.
ரஜினிகாந்தின் 170ஆவது திரைப்படத்தின் படப்படிப்பு கேரளத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், பணகுடியிலுள்ள தனியாா் ஓடு உற்பத்தி தொழிற்சாலையில் 3 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தது. அதன்படி, கேரளத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.
அவரது வருகையை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கூடினர். இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில், ரசிகா்கள் யாரையும் காவல்துறையினா் உள்ளே அனுமதிக்கவில்லை. அங்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் தலைவர் 170 படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்ற நடிகர் ரஜினிகாந்தை பாஜக மூத்த தலைவர் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில், கன்னியாகுமரிக்கு சினிமா படப்பிடிப்புக்காக வந்திருக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது..இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.