மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

லியோ வெளியான திரையரங்கில் மோதிரம் மாற்றிக் கொண்ட ஜோடி!

புதுக்கோட்டையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம் நடைபெற்றது.

News image

லியோ வெளியான திரையரங்கில் மோதிரம் மாற்றிக் கொண்ட ஜோடி

Updated On :19 அக்டோபர் 2023, 4:50 am

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம் நடைபெற்றது.

விஜய்யின் ரசிகர் வெங்கடேஷுக்கும் இதே ஊரைச் சேர்ந்த மஞ்சுளாவுக்கும் லியோ படத்தின் முதல்காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்தத் திருமணம் நடைபெற்றது.

இதையும் படிக்க | லியோ எப்படி இருக்கிறது?

விஜய் மக்கள் மன்றத்தின் மாவட்டத் தலைவரும் புதுகை நகர்மன்ற உறுப்பினருமான பர்வேஸ் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

Story image

மாலை மாற்றிக் கொண்டு, மோதிரம் மாற்றிக் கொண்ட இந்த ஜோடிக்கு நாளை முறைப்படி பெருமாள் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story image

நடிகர் விஜய்யின் மதமான கிறிஸ்துவ முறைப்படி இன்று மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணம் செய்ததாக மணமகன் வெங்கடேஷ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.