நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றன.
அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும். தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: நாளை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மாற்றம்!
இந்நிலையில் ராஜ் கிரண் இப்படத்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்து வருகிறார். அவரது பேரனாக நடிக்கும் கார்த்தியும் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு காட்சியில் கார்த்தி எம்.ஜி.ஆர் கெட்டப்பிலேயே வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு வணிகரீதியிலான உருவாகிவரும் இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடைசி ஓவரில் லக்னௌ அணி த்ரில் வெற்றி!

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


