நடிகர் நானியின் 31வது படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நானி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். இவரது முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’ மற்றும் ‘அடடே சுந்தரா’ திரைப்படம் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான 'தசரா' கலவையான விமர்சனங்களை பெற்றன. நானியின் 30வது படமாக ஹாய் நான்னா படம் உருவாகி வருகிறது.
இதில் நானியுடன் மிருணாள் தாக்குர் நடிக்கிறார். இதனிடையே நானியின் 31வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. டிவிவி என்டர்டெர்யின்மென்ட் தயாரிப்பில் அடடே சுந்தரா படக்குழுவுடன் நானி மீண்டும் இணைகிறார். அடடே சுந்தரா படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் நடிகர் நானியின் 31வது படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
அண்மையில் விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பிலான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் விரைவில் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் தீவிர தட்டம்மை பாதிப்பு: 10 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

விக்ரம் - வேதா - விஜய்!

காவல் நிலையங்களில் சிசிடிவி: மத்திய உள்துறைச் செயலா் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


