உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

சேரன் படத்தில் இணையும் கேஜிஎஃப் பட நாயகி!

இயக்குநர் சேரன் இயக்கத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் கேஜிஎஃப் பட நாயகி இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

Published On :2 பிப்ரவரி 2024, 8:42 am IST

கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிச்சா சுதீப்பின் 47வது திரைப்படமான இதை, இயக்குநர் சேரன் இயக்குகிறார். 

கன்னடத்தில் உருவாகும் இப்படம் தமிழிலும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கேஜிஎஃப் படக் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎஃப் படத்தினை அடுத்து தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். 

தற்போது நடிகர் சுதீப் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் சேரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். 

இயக்குநர் சேரன் கடைசியாக 2019-ஆம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து தற்போது இப்படத்தினை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.