
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து மறைவுக்குப் பிறகு, இத்தொடரின் டிஆர்பி புள்ளிகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்களைக் காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன்படி, எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த வாரம் எந்த தொடர்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.
கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த வானத்தைப்போல தொடர் 10.40 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, இந்த வாரம் முதலிடத்தில் உள்ளது. கயல் தொடர் 10.14 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
சுந்தரி தொடர் 9.75 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த சிங்கப் பெண்ணே தொடர் 9.62 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
எதிர்நீச்சல் தொடர் 9.55 டிஆர்பி புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. சென்ற வாரம் ஆறாம் இடத்தில் இருந்த சன் டிவியின் இனியா தொடர் 8.16 டிஆர்பி புள்ளிகளுடன் தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 7.25 ஆர்பி புள்ளிகளுடன் 7வது இடத்திலும், பாக்கியலட்சுமி தொடர் 7.19 ஆர்பி புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது.
ஆனந்த ராகம் தொடர் 7.16 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9வது இடத்திலும், சிறகடிக்க ஆசை தொடர் 6.87 டிஆர்பி புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.