எனது அழகின் ரகசியம் இதுதான்: சோனம் கபூர் பகிர்ந்த டிப்ஸ்! 

எனது அழகின் ரகசியம் இதுதான்: சோனம் கபூர் பகிர்ந்த டிப்ஸ்! 

நடிகை சோனம் கபூர் தனது அழகின் ரகசியம் குறித்து பேசியுள்ளார். 
Published on

பிரபல நடிகையும் கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான சோனம் கபூர் தனது காதலரும் தொழிலதிபருமான ஆனந்த் அகுஜாவை 2018இல் திருமணம் செய்தார். 2022இல் குழந்தை பிறந்தது.  

நடிகை சோனம் கபூர், நடிகர் அனில் கபூரின் மகள். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், அனில் கபூரின் அண்ணன். ஆனந்த் அகுஜா தொழிலதிபர். ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளரான ஹரிஷ் அகுஜாவின் பேரன். அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார் ஆனந்த். 

2007இல் சஞ்சய் லீலா பன்சாலியின் சாவரியா படத்தில் அறிமுகமானார். அபிஷேக் பச்சனுடன் நடித்த தில்லி-6 நல்ல வரவேற்பினை பெற்றது. 2016இல் வெளியான நீர்ஜா படத்துக்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக ஜூலை 7ஆம் தேதி ஜியோ சினிமாஸில் ப்ளைண்ட் எனும் படம் வெளியானது. 38 வயதான சோனம் கபூருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ஆனால் இன்னும் இளமையாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். 

குழந்தை பிறப்புக்கு பின்பாக முதன்முறையாக ரேம்ப் வாக்கில் பங்கேற்று நடந்தார். இந்த நிகழ்ச்சியில் சோனம் கபூர் கூறியதாவது:

எனது தலைமுடிக்கு பாதம், தேங்காய் எண்ணெய் உபயோகிக்கிறேன். இயற்கை ஆயுர்வேத மூலப்பொருள்கள் (உப்டான்) மற்றும் ரோஸ்வாட்டர் (பன்னீர்) முகத்துக்கு பயன்படுத்துகிறேன். எனது தோளினை நான் மிகவும் பாதுகாக்கிறேன். மிகவும் முக்கியமாக இந்தியப் பெண்கள் சூரிய வெளிச்சத்துக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். 

அம்மாவாக இருப்பது கடினம் என பலரும் கூறினார்கள். ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிது ஒய்வுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பேன் எனக் கூறினார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com