2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

ஜான் சீனாவைச் சந்தித்த கார்த்தி!

நடிகர் கார்த்தி பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனாவை சந்தித்துள்ளார்.

News image
Updated On :8 செப்டம்பர் 2023, 12:37 pm

DIN

சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்கான தொடரை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, இன்று ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் ‘சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்’ என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் டபிள்யூடபிள்யூஈ(WWE) மல்யுத்தப் போட்டி.

இதில், மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

Story image

இந்நிலையில் நடிகர் கார்த்தி, ஜான் சீனாவை சந்தித்ததுடன், “ ஜான் சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி. சந்தித்த சில நிமிடங்களில் நீங்கள்  அனைவரையும் சிறப்பாக உணரவைத்தது அற்புதம்.” என தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Story image

சோனி ஸ்போர்ட்ஸ் நடத்தும் இந்த உலக மல்யுத்தப் போட்டிக்கான இந்திய விளம்பரத் தூதர் நடிகர் கார்த்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.