நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனின் திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் இன்று திருமணம் செய்தார்.
இவர்களின் திருமணத்துக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அதுவே நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அண்மையில் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. நடிகர் அருண் பாண்டியனின் சகோதரர் மகள் தான் ரம்யா பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.