தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சந்திரமுகி - 2 படத்தின் புதிய பாடல் வெளியானது!

சந்திரமுகி - 2 படத்தின் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2023, 1:17 pm

DIN

சந்திரமுகி - 2 படத்தின் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2005-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வெற்றி பெற்றதோடு மிக அதிகமான வசூலையும் குவித்தது குறிப்பிடத்தக்கது.  

லைகா புரடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி - 2 படத்திற்கு ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை - தோட்டா தரணி.  

மேலும், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை நிலையில், வரும் செப்.28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், சந்திரமுகி - 2 படத்தின் தொறி பொறி எனத் தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். ஹரிசரண் மற்றும் அமலா செபோலு இப்பாடலை பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.