வெளியானது கல்ட் மாமா பாடல்! 

பிரபல தெலுங்கு நடிகர் பொதினேனியின் ஸ்கந்தா படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. 
வெளியானது கல்ட் மாமா பாடல்! 

தமிழில் அடையாளம் எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர் ராம் பொதினேனி. பின்னர் தெலுங்கில் படங்களை தொடர்ச்சியாஅக நடித்துவரும் ராம் பொதினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான தி வாரியர் திரைப்படம் சுமாரான வெற்றியே பெற்றது. இருப்பினும் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. 

இந்நிலையில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் படத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம்தான் ஸ்கந்தா. இந்தப் படத்தினை எழுதி இயக்குகிறார் பொயபடி ஸ்ரீனு. ராம் சரண், அல்லு அர்ஜுன், பாலகிருஷ்ணா ஆகியோரது படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபல நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து மிகப்பெரும் ஆதரவினைப் பெற்றார். சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப் பழகியவர். இவரது பல்சர் பாடல் செம்ம வைரலானது. 

தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக உருவாக உள்ளது. 

இந்நிலையில் படத்தின் கல்ட் மாமா பாடல் வெளியாகியுள்ளது. லெஜெண்ட் படத்தில் நடித்திருந்த ஊர்வசி ரௌடேலா இந்தப் பாடலில் ரா பொதினேனியுடன் நடனம் ஆடியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com