நடிகர் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் தொடரில் முக்கிய பாத்திரமாக இருந்து வரும் குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்துவந்தார். மாரிமுத்து இல்லாமல் வெளியாகும் முதல் டிஆர்பி பட்டியல் இதுவாகும்.
கடந்த வாரம் வெளியான டிஆர்பியில் மாரிமுத்துவின் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்த வாரம் வெளியான எபிஸோடுகளில் மாரிமுத்துவின் காட்சிகள் வெகுவாகக் குறைந்திருந்தன. அவை மாரிமுத்துவின் கடைசி எபிஸோடுகளாக அமைந்ததுதான் சோகம்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் பலரைக் கவர்ந்துள்ள தொடராக எதிர்நீச்சல் உள்ளது. இந்தத் தொடரில் ஆதி குணசேகரன், நந்தினி, ஆதிரை, கரிகாலன், கதிர், ஜீவானந்தம், பர்ஹானா என அனைத்து பாத்திரங்களும் தனித்துவமானவை.

குறிப்பாக ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து சிறப்பான நடிப்பை வழங்கிவந்தார். அவரின் நகைச்சுவை, நக்கல் கலந்த வில்லத்தனம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் கவர்ந்தது. இதனால், அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது. ஒரு தொடரில், முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் நடிகையை விட அதிக மக்களால் கொண்டாடப்படும் பாத்திரமாக இது அமைந்தது.

ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்து
வாரவாரம் வெளியாகும் டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் - கயல் ஆகிய இரு தொடர்களுக்கு இடையே முதலிடத்தைப் பிடிப்பதில் போட்டி நிலவும். கடந்த இரண்டு வாரங்களாக எதிர்நீச்சல் முதலிடம் பெற்று வந்தது.
இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு தற்போது டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. மாரிமுத்து எதிர்நீச்சல் தொடருக்கு பெரும் பலமாக கருதப்பட்டார். அவர் இல்லாமல், தொடருக்கான டிஆர்பியும் குறையும் என்று விமர்சனங்கள் எழுந்தன. எனினும் கடந்த இரு வாரங்களைப்போன்று இந்த வாரமும் எதிர்நீச்சல் தொடர் 10.79 புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.
கயல் தொடர் 10.74 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளது. சுந்தரி தொடர் (9.79 டிஆர்பி புள்ளிகள்) 3வது இடத்தையும், வானத்தைப்போல தொடர் (9.53 டிஆர்பி புள்ளிகள்) 4வது இடத்தையும் இனியா தொடர் (8.82 டிஆர்பி புள்ளிகள்) 5வது இடத்தையும் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய சவுத் இந்தியன் வங்கி!

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



