தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தாமதமாகும் ரஜினி - 170 படப்பிடிப்பு?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ‘ரஜினி 170’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

News image
Updated On :22 செப்டம்பர் 2023, 7:37 am

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர்  உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அடுத்ததாக,  ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்.  

மேலும், இதில் ரஜினிக்கு வில்லனாக ஃபஹத் பாசிலும்  முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் நடிகை துஷாரா விஜயனும் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு ‘வேட்டை’ எனப் பெயரிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதிகளில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாமதமாகி அக்டோபர் இறுதியில் துவங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.