
பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முக்கியமான படங்களை இயக்கியுள்ளார். தற்போதைய முக்கியமான இயக்குநர்களுக்கு ரோல்மாடலாக ராம் கோபால் வர்மா இருக்கிறார்.
ராம் கோபால் வர்மாவின் சிவா, சத்யா, ரங்கீலா, சர்கார் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது சிறிய அளவிலான படங்களினை இயக்கி வருகிறார்.
இதையும் படிக்க: நாயகியாக அறிமுகமானார் சல்மான் கானின் தங்கை மகள்!
சர்ச்சையான கருத்துகளை பேசியும் நடிகைகளுடன் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டும் அடிக்கடி டிரெண்டிங்கிலும் சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஆர்ஜிவி, “நான் நிறைய வெற்றிப் படங்களும் தந்திருக்கிறேன். தோல்விப்படங்களும் தந்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் என்னைப் பொருத்தவரை எல்லாம் சமமான படங்களே. அதன் வசூல் விபரங்களால் அதை பிரித்துவிடுவதில்லை. கரோனா காலக்கட்டத்தில் நான் பல படங்களை இயக்கினேன். ரூ.2000 செலவில் எடுக்கப்பட்ட ஒரு படத்தின் மூலம் ரூ.75 லட்சம் சம்பாத்தித்து இருக்கிறேன். எனக்கு பணம் எப்போதும் பிரச்னை இல்லை. தற்போது புதிய படம் ஒன்று இயக்கவிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.