துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்தின் புதிய படத்தை யார் இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி அவரின் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும், அந்த படத்துக்கு விடாமுயற்சி எனவும் தலைப்பு வைக்கப்பட்டது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புணேவில் தொடங்கவுள்ளதாகவும், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டதுடன் இப்படம் கைவிடப்படுவதாக சினிமா வட்டாரங்களில் பேசிவந்தனர்.
ஆனால், சந்திரமுகி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லைக்கா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன் கலந்துகொண்டு, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தங்களுக்கு இப்படம் முக்கியமானது என்பதால் இனி தாமதமாகாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்த ஜான்வி கபூர்!
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சய் தத் தென்னிந்திய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த கேஜிஎஃப் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, லியோ படத்தில் நடித்துள்ளார். தற்போது, அஜித்துடன் இணையும் தகவல் வெளியாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 அமைச்சர்கள் பதவியேற்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

தவெக இதைச் செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்! | CPI | TVK |
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



