முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்த ஜான்வி கபூர்!

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தன் முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்த ஜான்வி கபூர்!

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி. 

தற்போது, ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தில் நடித்து வருகிறார். 

இதையும் படிக்க: சலார் டிரைலர் எப்போது?

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜான்வி கபூர் தன் முறிந்துபோன முதல் காதலைப் பற்றி பேசினார். அதில், “படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் ஒருவரைக் காதலித்துக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த வயதில் பக்குவம் இல்லாததால் எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டது. மேலும், பொய் சொல்லியே உறவை நீட்டித்துக்கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் என் பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர்கள் என்னை கடுமையாக எச்சரித்ததுடன் படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைப் புரிந்துகொண்டு அந்தக் காதலை முறித்துக்கொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com