இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பிக் பாஸ்: திடீரென நடந்த எலிமினேஷன்! வெளியேறியது இவர்தான்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதல் முறையாக மிட் வீக் எவிக்‌ஷன் நடந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2023, 10:48 am

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் முதல் முறையாக மிட் வீக் எவிக்‌ஷன் நடந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

அனன்யா ராவ்.

அனன்யா ராவ்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இதுவரை 12 பேர் பிக் பாஸைவிட்டு வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக்ஜம் புயலின் காரணமாக பெரும்பாலான மக்கள் வாக்களிக்க இயலாததால், சென்ற வார எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த சீசனில் முதல் முறையாக மிட் வீக் எவிக்‌ஷன் நிகழ்ந்துள்ளது. அதன்படி, வைல்டு கார்டில் இரண்டாவது முறையாக பிக் பிக் நிகழ்ச்சிக்கு வந்த அனன்யா ராவ் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.