/

ஒடிடியில் வெளியானது கிடா!

நடிகர் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிடா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2023, 4:56 am

DIN

நடிகர் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கிடா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கிடா'.

அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கியுள்ள இந்த படத்தில் பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தீசன் இசையமைத்துள்ளார்.

கிடா படமானது வெளியீட்டுக்கு முன்பே பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் கிடா திரைப்படம் வெளியானது. 

இந்த நிலையில், கிடா திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.