காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.

தற்போது, மணிகண்டன் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் பிரபுராம் வயாஸ் இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: மறுமணம் எப்போது?: நடிகை சமந்தா அதிரடி பதில்!
மேலும், இப்படத்தில் கெளரி பிரியா ரெட்டி, நடிகர் கண்ணா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக மணிகண்டன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குநருடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி கூறியதாவது:
பயணம் குறித்த கதைகள் பெரும்பாலும் ஆக்ஷன் அல்லது த்ரில்லர் கதைகளாக சொல்லப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தின் ஆணை மையமாக வைத்து ஃபேமலி எண்டர்டெயின்மென்டாக இந்தப் படத்தினை உருவாக்க இருக்கிறோம்.
குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். பிட்ட கதலு படத்தில் நடித்த சான்வே மேகனா நாயகியாக நடிக்கிறார். கோயம்புத்தூரைச் சுற்றி படமாக்க உள்ளோம். 2017இல் இருந்து இந்த கதையை உருவாகி வருகிறோம். நானும் பிரசன்னாவும் எழுத்தாளர்- இயக்குநராக சினிமாவில் அறிமுகமாக திட்டமிட்டு வந்தோம். தற்போது நிஜமாகிறது எனக் கூறினார்.
சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய வைஷக் ராஜேஸ்வர் இசையமைக்க இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



