
கவினின் 'டாடா' திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் படம் ‘டாடா’ . இதில் அவருக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் நடிக்கிறார். மேலும படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க- வாரிசு படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு?: வெளியானது சென்சார் சான்றிதழ்
இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசையமைக்க, எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.