நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தெலுங்கில் 3 நாள்கள் தள்ளிப்போன வாரிசு ரிலீஸ்

வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரிசுடு ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

News image
Updated On :9 ஜனவரி 2023, 6:34 am

DIN

வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரிசுடு ஜனவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே படத்தில் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணிவு திரைப்படம் அதேநாளில் வாரிசு படமும் வெளியாகவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. 

மேலும வாரிசு படத்தின் முன்பதிவும் பல்வேறு திரையரங்குகளில் தொடங்கியவுடனேயே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் வாரிசு படத்தின் தெலுங்கு டப்பிங்கான வாரிசுடு ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார். 

அதேசமயம் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதியும், சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படம் ஜனவரி 13ஆம் தேதியும் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.