
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் படமாக்கப்பட்டு வருகிறது.
தற்போது, படப்பிடிப்பு பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்திருக்கும் நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையும் படிக்க: ’ஒவ்வொரு காட்சியிலும் சிக்ஸர்..’ துணிவு குறித்து பிரபல இயக்குநர்
இந்நிலையில், நடிகர் ரஜினியின் 171-வது படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் கைவிடப்படுவதாகவும் அவருக்கு பதிலாக இயக்குநர் பி.வாசு ரஜினியை இயக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பி.வாசு தற்போது ‘சந்திரமுகி - 2’ படத்தை இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் லைக்கா தயாரிப்பில் ரஜினியுடனான படத்தை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வாசு ரஜினி கூட்டணியில் பணக்காரன், மன்னன், சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்கள் உருவானது குறிப்பிடத்தக்கது.