
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: ’துணிவு - வாரிசு’ எந்தெந்த ஓடிடியில் வெளியீடு?
இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்களை சிலர் இணைய தளங்களிலும் டெலிகிராம் செயலியிலும் வெளியிட்டுள்ளனர். இதனை அதிகளவிலான ரசிகர்கள் தரவிறக்கமும் செய்து வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.