
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: பி.வாசு இயக்கத்தில் ரஜினி?
இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில், துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் வாரிசு திரைப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாக உள்ளது. இரு படங்களும் ஒரு மாதங்களுக்கு மேல் திரையிடப்படும் என்பதால் ஓடிடி வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...