சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பாலிவுட்டில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ’தெறி’ படம் 2016இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. சமந்தா, எமி ஜாக்ஸன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 68 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

தற்போது, ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தொடர்ந்து, தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தயாரிப்பு உரிமையைப் பெற்ற அட்லி அப்படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவானை நடிக்க வைக்கிறார். இதனை, ஜீவா நடித்த ‘கீ’ படத்தினை இயக்கிய காளிஸ் இயக்குகிறார்.

இந்நிலையில், வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க  நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருண் தவானின் 18வது படம் என்பதால் தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘விடி18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.