காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பேபி ரீமேக் உரிமைக்காகக் கடும் போட்டி!

தெலுங்கில் வெளியான ‘பேபி’ திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க ஹிந்தியில் கடும் போட்டி நிலவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா, வைஷ்ணவி, விராஜ் அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேபி’. 

காதலியால் ஏமாற்றத்துக்கு உள்ளாகும் நாயகனின் கதையாக உருவான இப்படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி தெலுங்கில் வெளியானது. 

வெளியாகி 12 நாள்களே ஆன நிலையில், இப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.7 கோடியில் தயாரான ‘பேபி’ வசூலில் ஆந்திர பாக்ஸ்ஆஃபிஸை கலங்கடித்து வருகிறது. 

விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜுன் ரெட்டி’ கைகொடுத்ததுபோல் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ‘பேபி’ பெரிய வரவேற்பைக் கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்க பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருவதாகவும் அதிக விலைக்குக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.