
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி விளம்பரப் படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அந்த விளம்பரப் படத்தின் முன்னோட்டம் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ். ராஜமெளலி உயர்ந்துள்ளார். பிரமாண்ட படங்களை இயக்கி கதை அளவிலும், வசூல் ரீதியிலும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
அவர் சமீபத்தில் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதையும் வென்றது. இதன் மூலம் உலகின் பல நாடுகளில் அவரின் ஆர்ஆர்ஆர் படம் சென்று சேர்ந்தது.
சர்வதேச அளவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக மாறியுள்ள ராஜமெளலி தற்போது விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரமித்துள்ளார். இவர் தற்போது ஓப்போ செல்போன் நிறுவனத்தின் புதியரக ஸ்மார்ட் போன்களின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நடித்துள்ள விளம்பரப் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
#SSRajamouli new oppo ad coming soon pic.twitter.com/ZvjuJxQub2
— Cinema Circuit (@Cinema_Circuit) June 27, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...