தன் தந்தையால் 8 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகையும் தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியுள்ளார்.
அதில், ‘என் தந்தை மனைவி, மகளை அடிப்பதையும் பெண் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதையும் பிறப்புரிமையாக நினைத்தவர். நான் 8 வயதில் என் அப்பாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். இதுகுறித்து என் அம்மாவிடம் சொன்னாலும் அவர் நம்பியிருக்க மாட்டார். காரணம், ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்கிற மனநிலையில் இருந்தார். ஒருகட்டத்தில் என் 15-வது வயதில் இதற்குமேல் பொறுக்க முடியாத நிலை வந்தபோதுதான் தைரியமாக என் தந்தையிடம் இதுகுறித்து பேச முடிந்தது. அவரோ என் 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அடுத்த வேளை உணவு எங்கிருந்து வரும் எனத் தெரியாத வறுமை. ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ அவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளின் வடுக்கள் வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
சொந்த தந்தைக்கு எதிரான குஷ்புவின் இந்தப் வெளிப்படையான பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


